அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கும் அரசியக் கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்கும் விரைவாக எதிர்வினையாற்ரி உடனுக்குடன் பதிலடி கொடுப்பவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள். மீம்ஸ்கள் நகைச்சுவையாக இருந்தாலும் சவுக்கடிகளாகவே உள்ளன.
நம்முடைய தமிழ் மீம்ஸ் கிரியேட்டர்கள் இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கு தங்கள் மீம்ஸ் மூலம் சவுக்கடி கொடுத்துள்ளார்கள். இன்றைய மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
பாமக 2026-இல் ஆட்சியைப் பிடிக்கும் என்று பாமக இளைஞரணி செயலாளரும் ராஜ்ய சபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், பாமக ஆட்சிக்கு வந்தால், பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று பாமகவினர் கூறி வருகின்றனர்.
இதற்கு கவுன்ட்டர் கொடுக்கும் விதமாக கட்டனூர் சேக் என்ற பயரில் உள்ள ட்விட்டர் பயனர், “௭ங்க சின்னய்யா ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்டுல ஒயின்ஷாப்பே இருக்காது.. அதுசரி.. இவ்ளோ அவசரமா ௭ங்க போற..?? ஒயின்ஷாப்புக்கு..” பாமகவினரை கலாய்த்துள்ளார்.
அண்மையில் வெளிநாடு சென்ற பிரதமர் மோடியிடம், ஊடகவியலாளர்கள் திடீரென மைக்கை நீட்டி கேள்வி கேட்க, அதை சற்றும் எதிர்பாராத மோடி, ‘ஓ மை காட்’ என்று கூறி பேட்டி அளிக்க மறுத்தார். அந்த வீடியோவைப் பகிர்ந்து பலரும் ட்ரோல் செய்தனர். அதே நேரத்தில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இரண்டு நாட்களாகத்தான் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார்.
இதனைக் குறிப்பிட்டுள்ள ஜேம்ஸ் ஸ்டேன்லி என்ற ட்விட்டர் பயனர், “ஜப்பான்ல ப்ரெஸ்மீட் வப்பான்.. அவரு Oh My God சொல்லுவாரு.. இங்க ட்ரோல் நடக்கும்.. வந்ததும் சிலிண்டர் ரூ. 50, பெட்ரோல் ரூ.10 னு ரேட்ட கூட்டுவாரு..” என்று கிண்டல் செய்துள்ளார்.
நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், இதைவிட ஒரு படி மேலே போய், “மோடி ஜி… ஜப்பான் பயணம்.” என்று குறிப்பிட்டு வடிவேல் படம் போட்டு, “அப்பாடா இப்பதான் சந்தோசமா இருக்கு…” என்று மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.
நெல்லை அண்ணாச்சி மற்றொரு ட்வீட்டில், “கோட்டையை நோக்கி… அண்ணாமலை..!! 72 மணி நேர கெடு…!!!!” என்று குறிப்பிட்டு கைப்புள்ள வடிவேலு மீம்ஸ் போட்டு ஏகத்துக்கும் கிண்டல் செய்துள்ளார்.
@azam_twitz என்ற ட்விட்டர் பயனர், பெட்ரோல் விலையைக் குறைத்ததற்கு நன்றி நேரு என சமூக வலைத்தளங்களில் வைரல் என்று குறிப்பிட்டு, வடிவேல் படம் போட்டு, “எல்லாத்துக்கும் நேரு தான் காரணம்னு ஜி சொல்றதால.. இதுக்கும் நேருதான் காரணம்னு நினைச்சிட்டாங்க போல” என்று கிண்டல் செய்துள்ளார்.
பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், “இனி திராவிட மாடல் கிடையாது, பாட்டாளி மாடல்தான்” என்று கூறியதற்கு கருப்பு மன்னன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “இந்த நாட்டுல குடிசை கொளுத்தி, மரம் வெட்டுறவன் எல்லாம் மாடல் பத்தி பேசுறஅளவுக்கு வெவஸ்த்த கெட்டுபோச்சி..” என்று கவுண்டமணி வாய்ஸ் மீம்ஸில் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
இத்தனை அரசியல் மீம்ஸ்களுக்கு மத்தியில், ஜேம்ஸ் ஸ்டேன்லி என்ற ட்விட்டர் பயனர், திருமணம் ஆகாமல் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களைப் பற்றி ஒரு ஜாலியான மீம்ஸ் பகிர்ந்துள்ளார்.
“நா சின்ன பையனா இருக்கும்போது
பெரிய பசங்க கல்யாணம் பண்றத பார்த்து இருக்கேன்…
இப்போ
நா பெரிய பையனா ஆனதுக்கு அப்புறம்
சின்ன பசங்க கல்யாணம் பண்றத பார்த்துட்டு இருக்கேன்…” ஜாலியாக மயில்சாமி மீம்ஸ் போட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”