அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு – மத்திய அரசு கிடுக்கிப்பிடி!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை செயலகத்தில் மீண்டும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பணிபுரியும் 1,300 ஊழியர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் முறையாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டது. இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாதுகாப்பு காரணங்களுக்காக
பயோமெட்ரிக்
முறை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில், மீண்டும் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் பயோமெட்ரிக் மூலம் வருகையை பதிவு செய்ய வேண்டும். தற்போது தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளிட்டவை ஆராய, சோதனை முறையில் வரும் 31 ஆம் தேதி வரை பயோமெட்ரிக் வருகைப்பதிவு செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பிற அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.