ஆடு பகை குட்டி உறவா: விளாடிமிர் புடினின் மகளுடன் ரகசியமாக வாழும் இகோர் ஜெலென்ஸ்கி

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் போராக வெடித்து, உலகையே பொருளாதார ரீதியில் பாதித்துள்ள நிலையில், அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபல ஜெர்மன் பத்திரிக்கையான Der Spiegel மற்றும் ரஷ்ய ஊடகமான iStories இணைந்து நடத்திய ஆய்வில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள்களில் ஒருவர் ஜெர்மனியில் ரகசியமாக ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறது.

ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மகள்களின் ஒருவரான கேத்தரினாவைப் பற்றித்தான் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் அவரது ரகசிய மகள்களும்

நடந்துகொண்டிருக்கும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில், புடின், மேற்கத்திய சார்பு ரஷ்யர்களை வெளிப்படையாகக் கடுமையாகச் சாடினார்.

மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவளிக்கும் ரஷ்யர்களை துரோகிகள் என்று முத்திரை குத்திய புடின், ரஷ்ய மக்களுக்கு துரோகம் செய்யும் கேவலமானவர்கள் அவர்கள் என்று கடுமையாக சாடினார்.

புடினின் முன்னாள் தொழில்முறை நடனக் கலைஞரான 35 வயதான கேடரினா (Katerina or Ekaterina) டிகோனோவா ஒரு மனிதனுடன் ரகசியமாக வாழ்ந்து வருவதாக இப்போது சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த அறிக்கை வெளிப்படுத்திய அந்த நபரின் பெயரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரும்பவில்லை.

மேலும் படிக்க | உக்ரைன் எஃகு அலையை கைப்பற்றிய ரஷ்யா

அறிக்கையின்படி, கேடரினா 52 வயதான இகோர் ஜெலென்ஸ்கியுடன் வாழ்ந்து வருகிறார். இது, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் குடும்பப்பெயர், அவர் புடினின் தற்போதைய பரம எதிரியாகக் கருதப்படுபவர் என்பது உலகம் அறிந்த ரகசியம். 

இகோர் ஜெலென்ஸ்கி, ஒரு முன்னணி தொழில்முறை பாலே நடனக் கலைஞர் மற்றும் முனிச் மாநில பாலேவின் முன்னாள் இயக்குனர்.

கேடரினாவுக்கு இரண்டு வயது மகள் இருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது, இருப்பினும், அறிக்கையில் குழந்தையின் பெயர் அல்லது வேறு எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் படிக்க |  ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா

 அநேகமாக இகோர் ஜெலென்ஸ்கியுடன்  புடினின் மகள் கேடரினாவுக்கு தொடர்பு இருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத வட்டாரங்கள் Der Spiegel இடம் தெரிவித்தன.

2017 மற்றும் 2019 க்கு இடையில் ரஷ்ய ரகசிய சேவைக் காவலர்களுடன் “50 க்கும் மேற்பட்ட முறை” முனிச்சிற்கு பறந்த கேடரினாவின் கசிந்த விமான விவரங்களும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான ரஷ்யாவின் முடிவிற்குப் பிறகு மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டதால், மாஸ்கோவிற்கும் முனிச்சிற்கும் இடையிலான வழக்கமான பயணம் கேடரினாவிற்கு தடைசெய்யப்பட்டது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.