ஆட்சியைக் கவிழ்க்காமலே புடின் பதவியிலிருந்து அகற்றப்பட ஒரு திட்டம் உள்ளதாகவும், அது 2023இல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரித்தானிய உளவுத்துறையின் முன்னாள் தலைவர் ஒருவர் பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என தப்புக் கணக்குப்போட்டுவிட்டு போர்க்களத்தில் பெரும் இழப்புகளை சந்தித்தன ரஷ்யப் படைகள்.
மேலும், உக்ரைனை ஊடுருவியதால் பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது தடைகளையும் விதிக்க, அது ரஷ்யாவில் செல்வாக்கு மிக்க செல்வந்தர்கள் பலருக்கு கோபத்தையூட்டியது.
ஆகவே, ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடினுடைய ஆட்சியக் கவிழ்க்க அவர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், அப்படி புடினுடைய ஆட்சியக் கவிழ்க்காமலே அவரை பதவியிலிருந்து அகற்றும் ஒரு திட்டம் தயாராகி வருவதாக, பிரித்தானிய உளவுத்துறையின் முன்னாள் தலைவரான Richard Dearlove என்பவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, சமீப காலமாக புடினுடைய நடவடிக்கைகள் அவர் உடல் நலத்தில் பிரச்சினை இருப்பதாக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
அவருக்கு பார்க்கின்சன் நோய் இருப்பதாகவும், தைராய்டு புற்றுநோய் இருப்பதாகவும் கருதப்படுகிறது.
ஆகவே, 2023இல், புடின். நீண்ட கால வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை ஒன்றிற்கு அனுப்பப்பட இருப்பதாக Dearlove தெரிவிக்கிறார். சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்கு அனுப்பப்படும் புடின், மருத்துவமனையிலிருந்து திரும்ப வரும்போது, அவர் ரஷ்யாவின் தலைவராக இருக்கமாட்டார் என்கிறார் Dearlove.
2023உடன் புடினுடைய கதை முடிந்தது என்கிறார் அவர்.
ஆக, ஆட்சியைக் கவிழ்க்காமலே இந்த ஆண்டு இறுதியில் புடினை சிகிச்சைக்காக மருத்துவமனை ஒன்றிற்கு கப்பலில் ஏற்றி அனுப்புவதுடன் ரஷ்யாவில் அவரது ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்கிறார் Dearlove!