வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டோக்கியோ: ஜப்பான் சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதில், ஒரு சிறுவன் தமிழில் ‛வணக்கம்’ என்ற பதாகையுடன் வரவேற்றதை கண்ட பிரதமர் மோடி, அதனை பாராட்டி அப்பாதையில் தன் கையொப்பமிட்டார்.
ஜப்பான் பிரதமர் அழைப்பின் பேரில், அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெறவிருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கும் குவாட் அமைப்பின் இரண்டாவது உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். டோக்கியோ சென்ற பிரதமர் மோடிக்கு ஜப்பானில் உள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, பல சிறுவர் சிறுமியர் பதாகைகளை ஏந்தி மோடியை வரவேற்றனர். அதில் ஒரு சிறுவன் தமிழில் ‛வணக்கம்’ என்ற பதாகை வைத்திருந்தான். இதனை கண்ட பிரதமர் மோடி, உற்சாகமடைந்து அச்சிறுவனின் வரவேற்பை ஏற்று, அப்பதாகையில் கையொப்பமிட்டார். மேலும் சிறுவர், சிறுமிகளுக்கு கை குலுக்கி உற்சாகப்படுத்தினார்.
Advertisement