கொரோனா பரவல் காரணமாக, இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதித்து, சவூதி அரேபிய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது, பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது, சுகாதாரத் துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்நிலையில் சவூதி அரேபியாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி தொற்று விகிதம் சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து சவூதி அரேபிய மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மே 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!
இதன்படி, இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், யேமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மெனியா, பெலாரஸ், வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்தியாவில் இருந்து சவூதி அரேபியா செல்லும் மக்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மேலும் உலக நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை வைரஸ் குறித்து கண்காணித்து வருவதாகவும் சவூதி அரசு தெரிவித்து உள்ளது.