வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெட்டா : மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியா உள்ளிட்ட, 16 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள, சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, சில நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. அதோடு, ‘பிரிட்டன், பெல்ஜியம் உள்ளிட்ட 12 நாடுகளில், 92 பேர் ‘மங்கி பாக்ஸ்’ எனும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, அந்நிறுவனம் உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து, மேற்காசிய நாடான சவுதி அரேபியா, ‘நாட்டு மக்கள், இந்தியா, உள்ளிட்ட, 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு, மங்கி பாக்ஸ் வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. பாதிப்பு ஏற்பட்டால், அதை சமாளிக்க நாடு தயாராக உள்ளது’ என, அறிவித்துள்ளது.
மங்கி பாக்ஸ் வைரசுக்கு, மனிதர்களிடையே பரவும் ஆற்றல் குறைவு என்பதால், அதன் பாதிப்பும் குறைவாகவே இருக்கும் எனவும், சவுதி அரேபியா கூறியுள்ளது.
Advertisement