புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் இன்பினிக்ஸ் ஹாட் 11 பிளே போனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஹாட் 12 பிளே போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த போன் தாய்லாந்து சந்தையில் அறிமுகமானது. தொடர்ந்து இப்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம்.
ஹாட் 12 பிளே: சிறப்பு அம்சங்கள்
- 6.82 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே.
- யுனிசோக் T610 ஆக்டா கோர் புராசஸர்.
- 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ். 3ஜிபி விர்ச்சுவல் ரேம் வசதியும் இதில் உள்ளது.
- 6000mAh பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி.
- டைப் – சி சார்ஜிங் போர்ட். போன் பாக்சில் சார்ஜரும் இடம் பெற்றுள்ளது.
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது.
- மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூபாய் 8,499. வரும் 30-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விற்பனைக்கு வருகிறது இந்த போன்.
<iframe width=”668″ height=”376″ src=”https://www.youtube.com/embed/LCcXQFZBf6o” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>