இந்தியா இலங்கையின் பெரிய சகோதரர் என்றும் இந்தியாவின் மனிதாபிமான உதவிக்கு நன்றி என்றும் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு உதவிகளை இலங்கை மக்களுக்கு வழங்கியிருப்பதற்கு பிரதமர் மோடிக்கும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.