உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானியர் விவகாரம்: அந்த இளம்பெண் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள்

பிரித்தானியாவில் ஒரு தம்பதியர் உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண் ஒருவருக்கு தங்கள் வீட்டில் இடமளித்த நிலையில், அவர்களுடைய பத்து ஆண்டுகால திருமண வாழ்வு பத்தே நாளில் முடிவுக்கு வந்தது.

ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு ஓடி வந்தார் சோபியா (Sofiia Karkadym, 22) என்ற அழகான உக்ரைன் இளம்பெண். அவருக்கு Bradfordஇல் வாழும் டோனி (Tony Garnett, 29), அவரது மனைவியான லோர்னா (Lorna) மற்றும் தம்பதியருடைய இரண்டு பிள்ளைகள் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள்.

ஆனால், சோபியாவுக்கும் டோனிக்கும் காதல் பற்றிக்கொண்டது. லோர்னா தட்டிக்கேட்க, இதுதான் வாய்ப்பு என மனைவியையும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு, சோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் டோனி.

உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானியர் விவகாரம்: அந்த இளம்பெண் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள்

இந்நிலையில், டோனி லோர்னா தம்பதியர் பிரிந்ததற்கு, தான் காரணம் அல்ல என்று கூறியுள்ளார் சோபியா. நான் லோர்னாவுடன் நீண்ட நேரம் செலவிட்டேன் என்று கூறும் சோபியா, ஆனால், அவர் இரட்டை வேடம் போடுபவர் என்று கூறியுள்ளார்.

எப்போது பார்த்தாலும் சந்தேகம், பதற்றம் என லோர்னா இருந்ததால்தான் , தானும் டோனியும் நெருக்கமானதாக தெரிவித்துள்ளார் சோபியா. எனக்கும் டோனிக்கும் இடையில் எதுவும் இல்லாதபோதே, ஏதோ இருப்பதாக லோர்னா கூறிக்கொண்டே இருந்தார். அது அவர் செய்த தவறு என்கிறார் அவர்.

இதற்கிடையில், நான் அவளுக்கு என் வீட்டில் இடமளித்தேன், ஆனால், அதற்கு பதிலாக அவள் இப்படி செய்வாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதனால் எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறித்து அவள் கவலைப்படவேயில்லை என்கிறார் லோர்னா. 

உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானியர் விவகாரம்: அந்த இளம்பெண் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள்

உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானியர் விவகாரம்: அந்த இளம்பெண் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.