உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தொடரும் நிலையில் ஜெலன்ஸ்கி ஒரு அதிரடி தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி தொடங்கிய போர் சண்டை மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரை குறிக்கும் விதமாக ரஷ்ய படைகள், ‘Z’ மற்றும் ‘V’ என்ற 2 ரஷ்ய எழுத்துக்களை பயன்படுத்தி வருகின்றன.
இந்த எழுத்துக்களை உக்ரைனில் பயன்படுத்த அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அதிரடியாக தடை விதித்துள்ளார்.
கல்வி மற்றும் வரலாற்று நோக்கங்களுக்கு மட்டும் அந்த எழுத்துக்களை பயன்படுத்த ஜெலன்ஸ்கி அனுமதி வழங்கியுள்ளார்.