ஆப்டிகல் இலுசியன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தரும் நல்ல பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக இருப்பதால் சமீக காலமாக சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்படுகின்றன. இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில் எத்தனை குதிரை இருக்கிறது சரியாக சொல்லுங்கள் பார்க்கலாம்?
பார்பவர்களை குழப்பமடையச் செய்யும் இந்த ஆப்டிகல் இலுசியன் படம் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தரக்கூடிய ஒரு நல்ல புதிர் படம் என்றால் மிகையல்ல. இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வரும் இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில் மொத்தம் எத்தனை குதிரை இருக்கிறது கண்டுபிடியுங்கள் என்று பலரும் சாவல் விட்டு பகிர்ந்து வருகின்றனர்.
பனி சூழ்ந்த மலை உச்சி குதிரகள் இருக்கிற இந்த படத்தில் நீங்கள் எத்தனை குதிரைகளைப் பார்த்தீர்கள்? மூன்று குதிரைகளா? ஐந்து குதிரைகளா? ஏழு குதிரைகளா? என்ன குழப்பமாக இருக்கிறது. கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.
தேசிய சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த படம் நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தி ஈர்த்துள்ளது. இந்த படத்தில் குதிரைகள் பகுதியாக மறைந்துள்ளன. இதில் மொத்தம் 7 குதிரைகள் இருப்பதாக கூறுகிறது. ஆனால், பலரும் இதில் 5 குதிரைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள அனைத்து குதிரைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லையா? கவலைப்படாதீர்கள். உங்களுக் சில டிப்ஸ் தருகிறோம்.
“இந்த படத்ஹ்டில் இடதுபுறம் ஒரு குதிரை வெளியே பார்க்கிறது, நடுவில் 4 குதிரை முகங்கள் நெருக்கமாக உள்ளன – அந்தக் குழுவில் ஒரு குதிரையின் பழுப்பு நிற மூக்கு (இடமிருந்து இரண்டாவது) தெரிகிறது. கீழே குனிந்த குதிரையின் முகத்தின் வலது பக்கம் தெரிகிற்து. வலதுபுறம் ஒரு சிறிய குதிரை பக்கவாட்டாக நிற்கிறது. அதற்கு மேலே ஏழாவது குதிரை பின்புறம் உள்ளது” இப்போது சரியாக 7 குதிரைகள் இருக்கிறதா பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“