உலகின் 40% மக்களின் சொத்து உலகின் 10 பணக்காரர்களிடம் உள்ளது.. ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தகவல்

உலகின் 40 சதவீத ஏழை மக்களின் சொத்து மதிப்பை விட, உலகின் டாப் 10 பணக்காரர்களிடம் சொத்து அதிகமாக உள்ளது என ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. துணை-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளின் மொத்த ஜிடிபியை விட உலகின் டாப் 20 பணக்காரர்கள் சொல்வ மதிப்பு அதிகமாக உள்ளது.

மேலும் அறிக்கையின் படி சொத்து மதிப்பில் கீழ் மட்டத்தில் உள்ள 50 சதவீத மக்களுக்கு 112 ஆண்டு ஆனால் தான் இந்த 10 பேரில் ஒருவருடைய சொத்து மதிப்பில் 1 சதவீத சொத்து கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

கடினமான உழைப்பைக் கொட்டும் ஊழியர்கள் குறைந்த சம்பளத்தைப் பெறுகின்றனர். பெரும் செல்வந்தர்கள் தொடர்ந்து அந்த பலன்களை அறுவடை செய்து வருகின்றனர் என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

உக்ரைன் போரால் பசி பட்டினியால் மில்லியன்கணக்கானோர் பாதிக்கலாம்.. எகிப்து நிதியமைச்சர் எச்சரிக்கை

பெண்களின் சம்பளம் சரிவு

பெண்களின் சம்பளம் சரிவு

கொரோனா காலத்தில் அதிக முறைசாரா தன்மை மற்றும் செலவுகள் அதிகரிப்பு காணமாக லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 4 மில்லியன் பெண்கள் வேலை இல்லாமல் உள்ளார்கள்.

 அமெரிக்காவில் வேலை செய்யும் பெண்களில் பாதி பேர் ஒரு மணி நேரத்திற்கு 15 அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.

மருந்து நிறுவனங்கள்

மருந்து நிறுவனங்கள்

கொரொனா கலத்தில் மட்டும் 40 மருந்து உற்பத்தித் தொழில் செய்பவர்களில் 40 நபர்கள் புதிய பில்லியனர்களாக உருவாகியுள்ளார்கள். கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஃபைசர் மற்றும் மாடெர்னா நிறுவனங்கள் ஒவ்வொரு நொடிக்கும் 1000 டாலர் லாபம் பார்க்கிறன. ஆனால் இதை உருவாக்க மக்களின் வரிப் பணம் பெரும் அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாத மக்கள்
 

தடுப்பூசி போடாத மக்கள்

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள 87 சதவீத மக்கள் இன்னும் முழுமையாகத் தடுப்பூசி போடப்படவில்லை. ஆனால் பொதுவான மருத்து உற்பத்திக்கான செலவை விட 24 மடங்கு அதிகமாக அரசாங்கங்களிடம் நிறுவனங்கள் வசூலிக்கின்றன.

பணவீக்கத்திலும் லாபம்

பணவீக்கத்திலும் லாபம்

பணவீக்கம், போர், வட்டி விகிதம் உயர்வு போன்ற காரணங்களால் உலக நாடுகளில் உணவு மற்றும் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் அதில் இந்த பணக்காரர்கள் லாபம் பார்க்கிறார்கள். ஆனால் ஏழை மக்களுக்கு செலவு அதிகரித்து ஒரு நாளுக்கு 3 வேலை என்ற உணவு, இரண்டு வேலையாகவும் குறைந்துவிடுகிறது.

புதிய பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

புதிய பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா காலத்தில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கு ஒருவர் என மொத்தம் 573 நபர்கள் புதிதாக பில்லியனர்களாக உருவாகியுள்ளார்கள். கடந்த 23 ஆண்டுகளில் சேர்க்காத சொத்தை சென்ற 24 மாதங்களில் இந்த பணக்காரர்கள் சேர்த்துள்ளார்கள் என ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறுகிறது.

2020-ம் ஆண்டு உலகின் டாப் 32 நிறுவனங்கள் மட்டும் 104 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளார்கள்.

ஆக்ஸ்ஃபாம் அறிக்கை

ஆக்ஸ்ஃபாம் அறிக்கை

ஆக்ஸ்ஃபாம் அறிக்கை மிகவும் சமீபத்திய மற்றும் விரிவான தரவு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பணக்காரர்கள் விவரங்களை ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலிலிருந்து எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

World’s Top 10 Rich Own’s More Wealth Than Bottom 40% Of Humanity: Oxfam

World’s Top 10 Rich Own’s More Wealth Than Bottom 40% Of Humanity: Oxfam | உலகின் 40% மக்களின் சொத்து உலகின் 10 பணக்காரர்களிடம் உள்ளது.. ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தகவல்

Story first published: Monday, May 23, 2022, 19:51 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.