அதிகரித்து வரு எரிபொருள் இறக்குமதி செலவைக் குறைக்கப் பாகிஸ்தான் அரசு வேலை நாட்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
அதற்காக மூன்று வகையான திட்டங்களை வகுத்துள்ளது. பாகிஸ்தானிய அரசு 2.7 பில்லியன் டாலர் வரை இதனால் சேமிப்பு கிடைக்கும் என நம்புகிறது.
2022-ம் நிதியாண்டில் ஜூலை முதல் ஏப்ரல் மாதம் வரையில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மட்டும் 17 பில்லியன் டாலருக்கும் அதிகமாக பாகிஸ்தான் செலவு செய்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 96 சதவீதம் அதிகம்.
15 வருடத்திற்குப் பின் வெளியேறும் ஸ்டார்ப்க்ஸ்.. 130 கடைகள் மூடல்..! #Russia
செலவை குறைக்கத் திட்டம்
எனவே மின்சாரம் மற்றும் பெட்ரோலிய துறையை எந்த வகையில் எல்லாம் மின்சாரம் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கலாம் என கருத்துக்களைக் கேட்டுள்ளது பாகிஸ்தான் அரசு.
பாகிஸ்தான் மத்திய வங்கியின் கணிப்புப் படி வார நாட்கள், சில்லறை வணிகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அதிகளவில் எரிபொருள் தேவை இருக்கிறது.
முதல் திட்டம்
முதல் திட்டத்தின் படி 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை. சில்லறைக் கடைகள் வார இறுதி நாட்களிலும் திறந்து இருக்கும். இந்த திட்ட முறை நடைமுறைக்கு வந்தால் மாதத்துக்கு 122 மில்லியன் டாலர் அல்லது ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர் சேமிப்பு கிடைக்கும்.
இரண்டாவது திட்டம்
இரண்டாவது திட்டத்தின் படி 4 நாட்கள் வேலை, 2 நாட்கள் விடுமுறை, 1 நாள் முழு ஊரடங்கு. இதை நடைமுறைப் படுத்தினால் மாதத்திற்கு 175 மில்லியன் டாலர் அல்லது ஆண்டுக்கு 2.1 பில்லியன் டாலர் சேமிப்பு கிடைக்கும்.
மூன்றாவது திட்டம்
மூன்றாவது திட்டம் 4 நாட்கள் வேலை, 2 நாட்கள் ஊரடங்கு, ஒரு நாள் விடுமுறை. இதை நடைமுறை படுத்தினால் மாதத்திற்கு 230 மில்லியன் டாலர் அல்லது ஆண்டுக்கு 2.7 பில்லியன் டாலர் சேமிப்பு கிடைக்கும்.
புதிய பிரதமர்
பாகிஸ்தானில் புதிதாக பிரதமர் பொருக்குக்கு வந்த உடன் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் என்ற முறை அமலுக்கு வந்துள்ளது. இதனாலும் கூடுதலாக எரிபொருள் செலவாகிறது. இதை எல்லாம் குறைத்து செலவை குறைக்கப் பாகிஸ்தான் இப்போது திட்டமிட்டுள்ளது.
எதிர்மறையாகப் பாதிக்கும்
இருப்பினும், இந்த முடிவுகள் மிகவும் கடுமையானதாக்க உள்ளது. இது பொதுமக்களின் நம்பிக்கையை எதிர்மறையாகப் பாதிக்கும் எனவும் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
Pakistan May Reduce Number Of Working Days Over Fuel Conservation
Pakistan May Reduce Number Of Working Days Over Fuel Conservation | எரிபொருள் செலவை குறைக்க வேலை நாட்களை குறைக்கும் பாகிஸ்தான்!