எல்லை மீறும் ரசிகர்கள் – மாளவிகா மோகனன் அதிருப்தி
பேட்டை, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவரை ஏராளமான இளவட்ட ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். சிலர் அத்துமீறி ஏடாகூடாமான கேள்வியை கேட்டவர்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்தார். இந்த நிலையில் மீண்டும் ரசிகர்களுடன் மாளவிகா மோகனன் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் அவரது மார்பகம் பற்றி ஆபாசமாக கேள்வி எழுப்பினார். இதனால் கோபமான மாளவிகா, ‛‛சில ஆண்களின் அடாவடித்தனம் ரொம்ப ஓவராக உள்ளது. அதை பார்த்து திகைத்து போனேன்'' என்று கூறியுள்ளார்.