ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ‘ஜன கன மன’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் பிரித்விராஜின் ‘ஜன கன மன’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

 ‘ப்ரோ டேடி’ படத்திற்குப் பிறகு பிரித்விராஜ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது ’ஜன கன மன’. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய இப்படம் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்தது. சூரஜ் வெஞ்சரமூடு, மம்தா மோகன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து தயாரித்திருந்தார்.

image

ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திந்தார். நிகழ்கால அரசியலை சமூகப் பார்வையுடன் எடுக்கப்பட்டு பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது.

image

’ஜன கன மன’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. படம் வெளியாகி 1 மாதம் கழித்து வரும் 27 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ‘ஜன கன மன’ மலையாளம், தமிழ்,தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. அதே தேதியில், விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.