கமுதியில் தந்தை உயிரிழந்த நிலையில் சோகத்துடன் பிளஸ் 2 மாணவி தேர்வில் கலந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி முத்துப்பாண்டி என்பவர் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில முத்துப்பாண்டியின் இறுதிச் சடங்கை இன்று நடத்த உறவினர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் கமுதி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் முத்துப்பாண்டியின் மகள் முத்துமாரிக்கு இன்று வரலாறு தேர்வு நடைபெற்றதை அடுத்து தந்தை உயிரிலிருந்து அவரது உடல் இறுதி மரியாதைக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவி முத்துமாரி சோகத்துடன் பள்ளிக்கு வந்து தனது தேர்வை மிகுந்த மன தைரியத்துடன் எழுதியுள்ளார்.
இதையடுத்து தேர்வு முடிந்த பின்னர் மாணவி தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்கு சென்றது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM