குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடக்காது… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி!!

டெல்லி : ஞானவாபி மசூதியை தொடர்ந்து குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாக வெளியான தகவலை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. டெல்லியில் உள்ள புராதன நினைவுச் சின்னங்களில்  குதுப்மினார் கோபுரமும் ஒன்று. இதனை குட்புதின் -அய்பக் காட்டவில்லை. இந்து மன்னரான விக்கிரமாதித்யா என்பவரே கட்டினார் என்ற ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி தரம் விர் ஷர்மாவின் கூற்று சர்ச்சைக்கு வித்திட்டது. இது உண்மையா என்பதை கண்டறிய குதுப்மினார் வளாகத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் பரவியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து குதுப்மினார் வளாகத்தில் அகழ்வாராய்ச்சி ஏதும் நடத்தப்போவதில்லை என்று ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அப்படியான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று அத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.