குரங்கம்மை அச்சுறுத்தல்! தடுப்பூசிகளுக்கு திட்டமிட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அறிவுறுத்தல்


மேற்கத்திய நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவ தொடங்கையுள்ள நிலையில், தடுப்பூசி உட்பட குரங்கம்மைக்கான பரவலை எதிர்ப்பதற்கான உத்திகளை தயார் செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் அறிவுறுத்தியுள்ளது.

நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் (ECDC) இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘நாடுகள் தங்கள் தொடர்புத் தடமறிதல் வழிமுறைகள், ஆர்த்தோபாக்ஸ் வைரஸைக் கண்டறியும் திறன் ஆகியவற்றைப் புதுப்பிக்க வேண்டும் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு பெரியம்மை தடுப்பூசிகள், வைரஸ் தடுப்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கிடைப்பதை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

தடுப்பூசிகளின் வகைகள், டோஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிலை ஆகியவை பயன்படுத்தப்பட வேண்டியிருந்தால், அவற்றை அரசாங்கம் மதிப்பாய்வு செய்ய வேண்டும்” என்று அது அறிவுறுத்துகிறது.

குரங்கம்மை அச்சுறுத்தல்! தடுப்பூசிகளுக்கு திட்டமிட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அறிவுறுத்தல்

அதற்காக, குறிப்பிட்ட ஆபத்தில் இல்லாதவர்களுக்கும் சேர்த்து வெகுஜன தடுப்பூசி திட்டங்களை இந்த அறிக்கை பரிந்துரைக்கவில்லை, ஆனால் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு தடுப்பூசியை கொடுக்கப்படலாம் என்று கூறுகிறது.

வைரஸால் பாதிக்கப்படக்கூடிய சுகாதாரப் பணியாளர்களும் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போடலாம் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அறிக்கையின்படி, நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் தங்கள் சொறி முழுமையாக குணமாகும் வரை தனிமையில் இருக்க வேண்டும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறது.

பெரும்பாலான மக்கள் ‘ஆதரவு கவனிப்புடன்’ வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய 9 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் குரங்கம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நோய் பிரித்தானியாவிலும், கனடா, அமெரிக்கா (பாஸ்டன் மற்றும் நியூயார்க்), அவுஸ்திரேலியா, இஸ்ரேல் மற்றும் சுவிட்சர்லாந்திலும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது, இதற்கென்று ​​குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எதுவும் இல்லை, ஆனால் பெரியம்மைக்கான தடுப்பூசி பயனுள்ளதாக உள்ளது.

பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால், நாடுகள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க முயற்சி செய்யத் தொடங்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய தொடர்புகளுக்கு பாதுகாப்பை வழங்க தடுப்பூசி கொடுக்கப்படலாம்.

குரங்கம்மை உள்ளவர்களின் நெருங்கிய தொடர்புகளுக்கு Postexposure Prophylaxis (PEP) தடுப்பூசி போடலாம் என்று பிரித்தனையா ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குரங்கம்மை அச்சுறுத்தல்! தடுப்பூசிகளுக்கு திட்டமிட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அறிவுறுத்தல்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.