உலகின் பல நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் தொடர்பில் ,இலங்கையும் கூடுதல் அவதானம் செயலுத்த வேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் களைப்பு என்பன இந்த நோயின் அறிகுறிகளாக காணப்படும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
மே மாதம் 13 ஆம் திகதி வரையிலும் உலகம் முழுவதும் 92 குரங்கு அம்மை நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த நோய் கொவிட் வைரஸ் தொற்று நோயைப் போன்று மிகவும் பயங்கரமானதொரு நோயாக இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளைm பெரியம்மை தடுப்பூசி தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.