சென்னை தி.நகரில் நடைபாதையை ஆக்கிரமித்து கடை அமைப்பவர்கள், கடைகளை அகற்ற லாரிகளுடன் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு செல்லும்போது அவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து விற்பனைப் பொருட்களை அருகிலுள்ள மறைவான இடத்தில் ஒளித்து வைத்து, மாநகராட்சி வாகனம் சென்ற அரை மணி நேரத்தில் மீண்டும் கடைகளை அமைத்து கூலாக விற்பனையை தொடருகின்றனர். இந்த கண்ணாமூச்சி தொடர்ந்து நடப்பதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.