சென்னை புறநகர் பகுதிகள் கலப்பட எரிபொருளை பதுக்கி வைத்து, விற்பனை செய்த இரண்டு நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னையில் கள்ளச்சந்தையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சென்னை பட்டரவாக்கம், திருநின்றியூர் ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த இரண்டு கிடங்குகளில் கலப்பட எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை எந்தவித ஆவணம் இல்லாமல் பதிக்க வைத்திருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து 1200 கலப்பட ஆயில், 1500 லிட்டர் பெட்ரோல், 200 லிட்டர் டீசல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த கலப்பட எரிபொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மைக்கேல் சூசை, ஜான்சன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.