சர்வதேச அளவில் பிரபலமான டிஜேக்கள் இடம்பெறும் மது விருந்துகள், ரிசார்ட்டுகள் மற்றும் ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது. சமீபத்தில் சனிக்கிழமை இரவு, சிட்டி மாலின் விரிவான மொட்டை மாடியில் நடத்தப்படும் மது விருந்துகளுக்கு சென்னை மாநகரம் முக்கிய இடமாகியுள்ளது.
கிரேட்டர் சென்னையில் டீன் ஏஜ் இளைஞர்கள் மத்தியில் சமூக ஊடகங்களில் ‘டிஜே நைட்ஸ்’, பூல் பார்ட்டிகள், “கம் டு ஹெவன்”, “ராக் அண்ட் ரோல்” இரவுகள் எனப் பிரபலமான பார்ட்டிகள் பரவலாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. இந்த விருந்து நிகழ்சிகளில் கலந்துகொள்ள ரூ.1,500-2,000 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில், உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு அளவில்லாமல் பானங்கள் வழங்கப்படுகிறது.
ஆனால், இந்த விருந்துகள் எல்லாம் தங்களுக்கு தெரியாமல் ஏற்பாடு செய்யப்படுவதாக காவல்துறையினர் கூறுகிறார்கள். மெக்சிகன் டிஸ்க் ஜாக்கி, எடுவார்டோ நெட்டோ அலியாஸ் மாண்ட்ரகோரா இவை எல்லாம் கவர்ச்சிகரமான சனிக்கிழமை இரவு விருந்துகள். ஐடி ஊழியர் ஒருவர் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டதால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறார். இந்த சம்பவத்தை அடுத்து, அந்த மது விருந்து நிகழ்ச்சியைபோலீசார் நிறுத்தியுள்ளனர்.
இரண்டு மாதங்களுக்குள் இரண்டு மது விருந்துகளை போலீசார் நிறுத்தியுள்ளனர். அண்ணாநகரில் சனிக்கிழமை நடந்த மது விருந்து ஒன்றையும் மாமல்லபுரத்தில் நடந்த மது விருந்து ஒன்றையும் நிறுத்தியுள்ளனர்.
இந்த மது விருந்துகளில், எல்.எஸ்.டி., ஹெராயின், கோகைன் போன்ற போதைப்பொருட்களுக்கு இளைஞர்கள் மத்தியில் டிமாண்ட் உள்ளது. சைக்கெடெலிக் இசையுடன் செல்லக்கூடியவர்களுக்கு அவை வழங்கப்படுவதை நடைபாதை வியாபாரிகள் உறுதி செய்கிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த மது விருந்துகளில் பங்கேற்பவர்களுக்கு 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்பட வேண்டும் என்று விதிகள் கூறினாலும் மது விருந்து ஏற்பாட்டாளர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.
சென்னை போன்ற பெரு நகரங்களில், முன்பெல்லாம், இது போன்ற மது விருந்துகள் முக்கியமாக பண்டிகைக் காலத்தை ஒட்டி நடந்தன. ஆனால், இப்போது இந்த மது விருந்துகள் வார இறுதி நாட்களில் நடைபெறுவதாக மாறிவிட்டது. இந்த மது விருந்துகள் நடத்த போதுமான சட்டப்பூர்வ இடம் இல்லாததால், அடிக்கடி சட்டவிரோதமாக பண்ணை வீடுகள், ஓய்வு விடுதிகள், காட்டேஜ்களில் நடைபெறுவதாகக் கூறுகிறார்கள்.
சென்னையில் அதிகரித்துள்ள இரவு மது விருந்துகள் குறித்து போதைப்பொருள் நுண்ணறிவு வட்டாரங்கள் கூறுகையில், போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க கடுமையான சோதனைகள் இல்லாததால், கல்லூரி மாணவர்களால் குறைந்த அளவில் பிற மாநிலங்களில் இருந்து போதைப் பொருள்கள் வரவழைக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் இதுபோன்ற மது விருந்து அறிவிப்புகளைக் கவனிக்க சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், போதைப்பொருள் பயன்படுத்தப்படுவது தகவல் தெரிந்தாலும் பறிமுதல் செய்வது என்பது கடினமானதாக உள்ளது. ஏனெனில், அவர்களில் பெரும்பாலோர் சோதனையின் போது அவற்றை மறைத்துவிடுகிறார்கள் அல்லது வேறு எங்காவது போட்டுவிடுகிறார்கள் என்று போதைப்பொருள் நுண்ணறிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“