Courtesy: ITV
ஊரடங்கின்போது டவுனிங் தெருவில் நடந்த ஒரு நிகழ்வில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மது அருந்திய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் No.10 டவுனிங் தெருவில் மது அருந்தும் 4 புகைப்படங்களை ITV நியூஸ் வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படங்கள், 13 நவம்பர் 2020 அன்று பிரதமரின் தகவல் தொடர்பு இயக்குநரான லீ கெய்னுக்காக நடந்த அந்த விருந்தில் எடுக்கப்பட்டவை என்று ஐடிவி நியூஸ் கூறியுள்ளது.
அந்த புகைப்படங்களில் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் மொத்தம் 8 பேர் இருக்கின்றனர். பிரதமரைத் தவிர மற்றவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் யார் யார் என்று தெரியவில்லை.
அதுமட்டுமின்றி, அந்த புகைப்படத்தை எடுத்த ஒன்பதாவது நபரும் அந்த மதுபான விருத்தில் கலந்துகொண்டுள்ளனர். அவர் யார் என்பது தெரியவில்லை.
அறையை திகதியில் பிரதமர் அலுவலகத்தில் நடந்த அந்த மதுமான விருந்து கொண்டாட்டத்திற்காக லண்டன் பெருநகர காவல்துறை அபராதம் விதித்துள்ளது.
இந்நிலையில், பார்ட்டிகேட் விவகாரம் தொடர்பான சர்ச்சைகள் வெடித்தபோது, டவுனிங் ஸ்ட்ரீட்டில் விதிமீறரல்கள் நடந்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என போரிஸ் ஜான்சன் கூறியது இப்போது அவர் மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.