டெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அனில் பைஜால் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியில் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரின் பதவி காலத்தில் அவருக்கும் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அனில் பைஜால் ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் வினய்குமார் சக்சேனாவை டெல்லி யின் புதிய துணை நிலை ஆளுநராக நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.வினய்குமார் சக்சேனா காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.