திண்டுக்கல் இளைஞரின் பிளாஸ்டிக் பெட்ரோல் – வேலுமணி சிக்னல் – வீட்டுக்கடன் தகவல் | விகடன் ஹைலைட்ஸ்

பிளாஸ்டிக் பெட்ரோல்: லிட்டருக்கு 58 கி.மீ மைலேஜ்; திண்டுக்கல் இளைஞரின் சூப்பர் கண்டுபிடிப்பு!

கார்த்திக்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(22). பழனி அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில் வேதியியல் பிரிவில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்துக் கொண்ட முயற்சியின் மூலம், தற்போது ப்ளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோல் எடுக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது.

பெட்ரோலின் விலையைவிட குறைவான விலைக்கு பிளாஸ்டிக் பெட்ரோலை விற்பனை செய்ய முடியுமா? இதைப் பயன்படுத்துவதால் இன்ஜினுக்கு பாதிப்பு உண்டா என்பது உள்பட இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்

“வழக்குதானே போட முடியும்; தூக்கிலா போட்டுவிடுவார்கள்?!” – ஐ.டி விங்குக்கு வேலுமணி சிக்னல்!

வேலுமணி

அதிமுகவின் கோட்டை எனச் சொல்லப்பட்ட கோவையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பெரிய ஓட்டையைப் போட்டுவிட்டது என்றால், அந்தக் கோட்டையை மேலும் சிதலமாக்கி, கொங்குமண்டலத்தில் திமுகவை வலுவாக்கும் நடவடிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி. வேலுமணியை ஏகத்துக்கும் டென்ஷனில் தள்ளுகின்றன.

வேலுமணிக்கு நெருக்கமான அதிமுகவினரை வளைக்கும் முயற்சிகள் ஒருபுறம் என்றால், ஒத்துவராதவர்கள் மீது வழக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக கொந்தளிக்கிறார்கள் அதிமுகவினர்.

இந்தச் சூழ்நிலையில், கோவையில் நடந்த மண்டல அளவிலான அதிமுக ஐ.டி விங் கூட்டத்தில் பேசிய வேலுமணி, திமுகவை எப்படி டீல் செய்ய வேண்டும் என்பது குறித்துப் பேசியதைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்…

மொழிப் பிரச்னையை முதலில் கிளப்பியது யார்?! – பிரதமரின் ஆதங்கமும் அரசியலும்

அமித் ஷா – நரேந்திர மோடி

உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழி குறித்துப் பேசிய கருத்து இந்திய அளவில் பெரும் விவாதமாக உருவான நிலையில், பிரதமர் மோடி, மொழி குறித்து கருத்து தெரிவித்திருப்பது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மொழிப் பிரச்னையை முதலில் கிளப்பியது யார்? இது குறித்து திமுகவின் கருத்து என்ன? அதற்கு ‘பெரியாரின் மறுபக்கம்’, ‘இந்துத்துவ அம்பேத்கர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரும், பா.ஜ.க பிரமுகருமான மா.வெங்கடேசன் சொல்வது என்ன எனப்தைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்

ஒவ்வொரு 30 மணி நேரத்துக்கும் ஒரு கோடீஸ்வரர் உருவானார்; அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!

கோடீஸ்வரர்

கோவிட் பெருந்தொற்று நம் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. பலருக்கு அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே பெரும் சவாலாக மாற, சிலருக்கோ செல்வம் இரட்டிப்பாக பெருகியது. கொரோனாவின் தாக்கம், பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை இன்னும் ஏழைகளாகவும் மாற்றி வருகிறது.

இந்த நிலையில், கோவிட் பெருந்தொற்றின் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு 30 மணி நேரத்துக்கும் புதிய கோடீஸ்வரர் உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தற்செயலானதா… அல்லது வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டதா? இது குறித்த ஆய்வுத் தகவல்கள் சொல்வது என்ன? க்ளிக் செய்யவும்…

வீட்டுக் கடன்… வாங்கும் முன்னும் பின்னும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

வீட்டுக் கடன்

எதற்கெல்லாம் வீட்டுக் கடன் கிடைக்கும்? கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச வயது எவ்வளவு? எந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவது சிறந்தது? கடன்தொகை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் ஆயத்தமாக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் யாவை என்பது உள்பட வீட்டுக் கடன் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.