காதலுக்காக கொலை செய்வதும், தற்கொலை செய்வதும் முட்டாள்தனம் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
திருச்சி அருகே கல்லூரி மாணவியை காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்திய ஓர் இளைஞரை செருப்பால் அடித்ததால், மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்கச் செய்ததாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“திருச்சி திருவெறும்பூரில் கல்லூரி மாணவியை காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார் ஓர் இளைஞர். இதனால் மன உளைச்சலுக்கான அம்மாணவி, அவரை செருப்பால் அடித்ததாகவும், ஆத்திரமடைந்த இளைஞர், நண்பர்களுடன் சேர்ந்து விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காதல் என்பது கட்டாயத்தின்பேரில் வராது என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும்போது, காதலுக்காக கொலை செய்வதும், தற்கொலை செய்துகொள்வதும் முட்டாள்தனம் என்ற விழிப்புணர்வை இளைஞர்கள், மாணவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமின்றி, நம் சமுதாயத்திற்கும் இருக்கிறது.”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
திருச்சி திருவெறும்பூரில் கல்லூரி மாணவியை காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார் ஓர் இளைஞர். இதனால் மன உளைச்சலுக்கான அம்மாணவி, அவரை செருப்பால் அடித்ததாகவும், ஆத்திரமடைந்த இளைஞர், நண்பர்களுடன் சேர்ந்து விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. (1/3)
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) May 23, 2022