திருச்சியில் செல்ஃபி: சாமானிய பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய நயன்தாரா- படங்கள்

Nayanthara- Vignesh Shivan fulfil airport employee wish to take selfie: தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முண்ணனி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கேரள மாநிலத்தில் பிறந்து வளர்ந்து ஒரு சிறிய தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் தனது கடுமையான முயற்சி மற்றும் திறமையால் படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.

ஐயா என்ற தமிழ்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். பின்னர் பிரபு தேவாவுடன் காதல் ஏற்பட்டது. அந்த காதல் முறிவுக்குப் பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் லிவ்விங் வாழ்க்கையில் உள்ளார். நயன்தாரா சில படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் பட ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளனர்.

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். அடிக்கடி கோவிலுக்கு செல்வது, வெளிநாடு செல்வது, ட்ரிப் போவது என்று இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் – நயன்தாராவுக்கு நிச்சயம் முடிந்துள்ளது, இருவரும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்படுகின்றது.

இந்தநிலையில் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சியில் உள்ள விக்னேஷ் சிவனின் குல தெய்வக் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளனர். திருமண உத்தரவு கேட்க குலதெய்வ கோவிலுக்கு வந்ததாக விக்னேஷ் சிவன் சூசகமாக கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: இதுதான் சன் டி.வி சட்டக் கல்லூரியா? இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

முன்னதாக, இருவரும் திருச்சி விமான நிலையம் வந்தபோது, விமான நிலையத்தில் பணிபுரியும் உயரம் குறைவான பெண் ஒருவர் நயன்தாராவுடன் செல்பி எடுக்க முயற்சி செய்தார். அப்பொழுது விக்னேஷ் சிவன் அவரது கைபேசியை வாங்கி இருவரும் அந்தப்பெண்ணுடன் நின்று நிதானமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.