ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் படகு ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
124 பயணிகள் உட்பட 130 பேருடன் பொலிலோ தீவிலிருந்து புறப்பட்டு கியூசான் நகரில் உள்ள ரியல் துறைமுகத்திற்கு சென்றுக்கொண்டிருந்த Mercraft 2 என்ற பயணிகள் படகே தீக்கிரையாகியுள்ளது.
இந்த விபத்தில் 5 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 7 பலியானதாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
ரியல் துறைமுகத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது படகின் இன்ஜின் அறையில் தீ ஏற்பட்டுள்ளது.
In the Philippines, a passenger vessel caught fire — 124 people were on board#Philippines #Emergency #Quezon #fire pic.twitter.com/JaO8BH5Dzl
— Readovka World (@ReadovkaWorld) May 23, 2022
நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சி எம்.பி-யை தாக்க முயன்ற ஆளும் கட்சி எம்.பி! சிக்கிய காட்சி
பின், படகு முழுவதும் தீப்பற்றியுள்ளது, படகிலிருந்த பயணிகள் அனைவரும் தீ விபத்திலிருந்து தப்பிக்க கடலில் குதித்துள்ளனர்.
சம்பவயிடத்திற்கு விரைந்த மற்ற படகுகள் கடலில் தத்தளித்த பயணிகளை மீட்டுள்ளனர்.
தற்போது வரை 105 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் இன்னும் காணவில்லை என பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.