அரச சேவையின் அத்தியாவசிய கடமைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை மாத்திரம் அழைக்குமாறு அறிவிக்கும் அரச நிர்வாக அமைச்சின் விசேட (24) வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட உள்ளார்.
சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய அத்தியவசிய உத்தியோகத்தர்களை தீர்மானித்தல் மற்றும் அதனை நிறுவன தலைவருக்கு வழங்குதல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.