நிதிப் பற்றாக்குறையா சிக்கித் தவித்து வரும் இலங்கை அரசு, திங்கட்கிழமை 6 அமைச்சர்கள் தலைமையில், பொருளாதாரப் போர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இதில் முக்கிய அமைச்சரான நிதியமைச்சர் என ஒருவர் இல்லை என்பது மிகப் பெரிய கேள்வியை எழுப்பி வருகிறது.
நிதி நெருக்கடியில் உள்ள இலங்கையில், அத்தியாவசிய தேவை பொருட்களான உணவு, எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது.
பிட்காயின் விலை 8000 டாலராகச் சரியும்.. அதிர்ச்சி அளிக்கும் கணிப்பு..!
கூடுதல் பொறுப்பு
சென்ற வாரம் இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கா பதவியேற்ற பிறகு, புதிய பிரதமருக்கு நாட்டின் நிதியை நிர்வகிக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் இதுவரையில் வரவில்லை.
நிதியமைச்சர்
நிதியமைச்சர் பொறுப்பை ஏற்க ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியைச் சேர்ந்த யாரும் முன்வரவில்லை, வர விருப்பம் இல்லை என எல்லோரும் மறுப்பதாகக் கூறப்படுகிறது. குறைந்தது 4 நபர்கள் அந்த பதவிக்கு பரிந்துறைக்கபப்ட்ட நிலையில், 4வரும் அதை ஏற்க மறூத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மஹிந்த ராஜபக்ஷ
மக்களின் போராட்டங்களுக்கு இடையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகி தலைமறைவாக உள்ளார். நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கும் நிலையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கா பொறுப்பேற்றுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்காவுடன் மீன்பிடி, விவசாயம், போக்குவரத்து, சுற்றுச்சூழல், கலாச்சாரம் மற்றும் நீர்ப்பாசனம் துறை அமைச்சர்கள் மட்டும் பொறுப்பேற்றனர்.
சர்வதேச நாணய நிதியம்
நிதியமைச்சர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை பிணை எடுப்பது குறித்த முடிவுகள் எடுப்பதில் தாமதமதம் ஆவதற்கு முக்கிய காரணமாக உள்ளது என மத்திய வங்கித் தலைவர் எச்சரித்துள்ளார்.
இலங்கை
22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு பல மாதங்களாகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் மக்கள் சாலையில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். மின்சாரமும் இல்லை. வரலாறு காணாத பணவீக்கம் பெரும் பிரச்சனையாக உள்ளது.
திவால்
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு அத்தியாவசிய பொருட்கள் வாங்கவே இல்லாததால், சென்ற மாதம் 51 பில்லியன் சாலர் கடனை திருப்பி செலுத்த முடியாமல் திவாலாவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Srilanka Govt Runs WIthout Finance Minister In Bankrupt
Srilanka Govt Runs WIthout Finance Minister In Bankrupt | நிதியமைச்சர் இல்லாமல் இயங்கும் இலங்கை.. எப்படி?