ஆப்டிகல் இலுசியன் படங்கள் ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமல்லாமல், அவை ஆளுமையை வெளிப்படுத்துபவையாகவும் உள்ளன.
மனதை மருளச் செய்யும் ஆப்டிகல் இலுசியன் படங்கள், முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. இவை ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல் பார்ப்பவர்களின் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதன் அடிப்படையில், அவர்களின் ஆளுமையையும் குணநலனையும் குறிப்பதாக உள்ளன.
நீங்கள் கேளிக்கைகளில் விருப்பமுள்ளவராக இருந்தாலும் சரி அல்லது மிகக் கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும் சரி, இந்த ஆப்டிகல் இலுசியன் உங்கள் ஆளுமையை ஒரே பார்வையில் வெளிப்படுத்தும் என்று இந்த படத்தைப் பார்த்த பலரும் கூறுகிறார்கள்.
டிக்டாக் இல் பகிரப்பட்டது, இந்த ஆப்டிகல் இலுசியன் துல்லியமாக ஆளுமையை குறிப்பிடுவதாக நெட்டிசன்கள் பலரும் கூறுகிறார்கள்.
ஹன்னா த்ராக் என்ற டிக்டாக் பயனர் இந்த இரண்டு படங்களுக்கான அர்த்தத்தை முதலில் கூறினார். ஹன்னா த்ராக் தனது டிக்டாக் பக்கத்தில் ஆப்டிகல் இலுசியன் படங்களுக்கு வேடிக்கையான உண்மைகளை கூறுகிறார். இவருக்கு 8.31 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர்.
ஹன்னா த்ராக் வெளியிட்ட சமீபத்திய வீடியோவில், இரண்டு ரகசிய விலங்கு விளக்கப்படங்களை மறைத்து ஒரு வண்ணமயமான ஆப்டிகல் இலுசியன் படங்களை பகிர்ந்துள்ளார்.
“இந்த படத்தில் நீங்கள் முதலில் என்ன பார்த்தீர்கள்” என்று ஹன்னா த்ரோக் கூறுகிறார்.
“நீங்கள் முதலில் ஒரு நரியைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் மிகவும் பிரபலமானவர் என்று அர்த்தம்” என்று ஹன்னா த்ராக் கூறினார்.
“நரியைப் பார்த்தீர்கள் என்றால் உங்கள் அன்புக்குரியவர்கள் உண்மையில் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் – உங்கள் நண்பர்களும் குடும்பத்தினரும் அவர்களுடைய வாழ்க்கையில் உங்களை நம்புகிறார்கள்” என்று ஹன்னா த்ராக் கூறினார்.
மறுபுறம், நீங்கள் முதலில் ஒரு டால்பினைப் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வித்தியாசமான முறையில் இணைகிறார்கள்.
“நீங்கள் மிகவும் அழகானவர், பயமுறுத்தும் கூச்ச சுபாவமுள்ளவர்” என்று கூறுகிறார்.
மேலும், “நீங்கள் வாக்குவாதங்கள் மற்றும் மோதலைத் தவிர்க்க முயற்சிக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் அதைச் சமாளிக்க விரும்பவில்லை” என்று கூறுகிறார்.
ஆனால் உங்களுடைய அறிவு பரவலாக அனைவருக்கும் தெரிந்தது. மக்கள் எப்போதும் உங்களிடம் ஆலோசனைக் கேட்டு வருவார்கள்.
இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில் முதல் பார்வையில் என்ன தெரிந்தது என்ற அடிப்படையில், அவர்களின் ஆளுமை குறித்து கூறப்பட்டது குறித்து பல பார்வையாளர்கள் தங்கள் முடிவுகளைப் பகிர்ந்து கொண்டனர். சிலர் இந்த கணிப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறினார்கள்.
“ஒருவர் நான் நரியைப் பார்த்தேன், ஆனால் நான் வெட்கப்படுகிறேன், அமைதியாக கூச்ச சுபாவமுள்ளவராக இருக்கிறேன்” குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, “எனது நண்பரும் குடும்பத்தினரும் என்னை நம்புவதாக நான் நினைக்கவில்லை” என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ, இந்த ஆப்டிகல் இலுசியன் படம், உங்கள் ஆளுமையைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு நல்ல பொழுதுபோக்கு புதிர் படம் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“