நடிகர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு, திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இலவச டிக்கெட்டுகளை வழங்கி வருவதாகவும், திரைப்படம் பார்க்க வருபவர்களுக்கு பிரியாணி போடுவதாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டு, தங்களது புகைப்படங்களை பகிர்ந்து, படத்தை பாராட்டி பதிவிடுகிறார்கள்.
டிக்கெட்டுகளை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள். படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி. வாழ்க திராவிடம்” என்று சீமான் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சீமான் பாராட்டுகிறாரா? இல்லை இதெல்லாம் ஒரு மக்கள் பணியா? என்று விமர்சனம் செய்கிறாரா என்று உடன்பிறப்புகளுக்கே சற்று குழப்பமாகத்தான் உள்ளது. இருப்பினும் அவரின் இந்த டிவிட்டர் பதிவுக்கு வந்துள்ள பின்னூட்டங்கள் சில பின்வருமாறு :