பிறரின் மத உணர்வை காயப்படுத்தும் துணைவேந்தரின் இந்த உத்தரவை வாபஸ் பெறுக: மீரட் பல்கலை. சுற்றறிக்கைக்கு இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் கண்டனம்

லக்னோ: இந்து மத புத்தகங்களை மாணவர்கள் வாங்கி படிக்க சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்ட மீரட் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடும் கண்டனம் வலுத்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகமாக சவுத்தரி சரண் சிங் பல்கலைக் கழகம், மீரட் பல்கலை கழகம் என அறியப்படுகிறது, பல்கலைக் கழகத்தின் கீழ், 8 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனகள் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான சங்கீதா சுக்லா, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.அயோத்திய பரம்பரை, சங்க்ரிதி, வீரசைட் ஆகிய இந்து மத புத்தகங்களை வாங்க உத்தரவு இந்த புத்தங்களில் அரிய புகைப்படங்கள் பல இடம்பெற்றுள்ளதாக துணைவேந்தர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த உத்தரவுக்கு இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த முன்னெடுப்பு, ஆர்.எஸ்.எஸ்.-ன்  திட்டத்திற்கு பிரசாரம் செய்வதாக உள்ளது மாணவர்கள், ‘பிறரின் மத உணர்வை காயப்படுத்தும் துணைவேந்தரின் இந்த உத்தரவை வாபஸ் பெறுக’ எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.