வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் இன்று திடீரென வானிலை மாற்றமடைந்து அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் டில்லியில் மணிக்கு 60 முதல் 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, கனமழையால் டில்லியில் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாலை போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
அத்துடன் சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், டில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள் கால தாமதமாக புறப்படும் எனவும், தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் தாமதமாக தரையிறங்கியதாகவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கனமழையால் இரண்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Advertisement