ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை மீண்டும் உயர்த்த உள்ளதாக ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு, வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. இப்போது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு பலத்த அடியாக, ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரிக்க தயாராக உள்ளது. இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த முறை ஒரு பயனரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வசூலிக்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
5ஜி ரிவர்ஸ் விலைகளுக்கான டிராயின் பரிந்துரையில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மகிழ்ச்சியடையவில்லை. 5ஜி ரிசர்வ் விலையை 90 சதவீதம் குறைக்க வேண்டும் என்று ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வலியுறுத்தின. “தொழில்துறையினர் ரிசர்வ் விலைக் குறைப்புக்கு எதிர்பார்த்தனர்; குறைப்பு இருந்தபோதிலும், அது போதுமானதாக இல்லை மற்றும் அந்த வகையில் ஏமாற்றமளிக்கிறது, ”என்று ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறினார்.
“எனது சொந்த எண்ணம் என்னவென்றால், இந்த வருடத்தில் சில கட்டண உயர்வை நாம் காணத் தொடங்க வேண்டும். ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணங்கள் இன்னும் குறைவாக இருப்பதாக நான் நம்புகிறேன். ஒரு பயனரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வசூலிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் இந்த விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியும்” கோபால் விட்டல் கூறினார்.
கடந்த ஆண்டு, வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தனியாருக்குச் சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர்களும் தங்கள் ப்ரீபெய்ட் விலைகளை கிட்டத்தட்ட 18 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்தனர். விலை உயர்வு இருந்தபோதிலும், ஏர்டெல் அதிக 4G பயனர்களை ஈர்த்தது. மார்ச் மாதத்தில் அதன் பயனர்களின் எண்ணிகை 5.24 மில்லியன் ஆகும். இது முந்தைய மூன்று மாத காலத்தில் 3 மில்லியன் சந்தாதாரர்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM