மகாராஷ்டிரா, கேரளா உட்பட 6 மாநிலங்களில் பெட்ரோல் மீதான வாட் குறைப்பு.. தமிழ்நாடு ஏன் குறைக்கல?

மத்திய அரசு பெட்ரோல், மற்றும் டீசல் மிதான கலால் வரியை சனிக்கிழமை 8 ரூபாய் மற்றும் 6 ரூபாய் என முறையே குறைத்தது. எனவே திங்கட்கிழமை முதல் பெட்ரோல் மீதான விலை 9.5 ரூபாய் வரையிலும், டீசல் மீதான வரியை 7 ரூபாய் வரையிலும் குறைந்தது.

கலால் வரியை குறைத்தது மட்டுமல்லாமல், மாநில அரசுகளும் பெட்ரோல் மீதான வார் வரியை குறைக்க வேண்டும். அதுவும் குறிப்பாக நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கும் போது வாட் வரியை குறைக்காத மாநிலங்களும் குறைக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் மூலம் தெரிவித்து இருந்தார்.

பெட்ரோல் மீதான வரியை குறைத்தது மட்டுமல்லாமல், 1050 ரூபாய் வரை உயர்ந்துள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான மானியத்தை 200 ரூபாயாக உயர்த்துவதாக அறிவித்தார். இதனால் 9 கோடி சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ளவர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.

வரி குறைப்புக்கு பிறகு எந்த மாநிலத்தில் பெட்ரோல் விலை குறைவு.. சென்னையில் என்ன நிலவரம்?

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பை வரவேற்று டிவிட் செய்த பிரதமர் மோடி, “மக்களுக்கு தான் நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறோம்! இன்றைய முடிவுகள், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி தொடர்பானது, பல்வேறு துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், நம் நாட்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும், மேலும் ‘எளிதான வாழ்க்கையை’ ஏற்படுத்தித் தரும்.”

“உஜ்வாலா திட்டம், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குப் பேருதவியாக இருந்துள்ளது. உஜ்வாலா மானியம் தொடர்பான இன்றைய முடிவுகள், குடும்ப வரவு செலவு கணக்கைப் பெருமளவு எளிதாக்கும்.” என கூறியிருந்தார்.

 ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்ததைப் பாராட்டாமல் அதிலும் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் குறை கண்டுபிடித்து உள்ளார். பெட்ரோல் விலையை இரண்டு மாதங்களில் பத்து ரூபாய் உயர்த்தி விட்டு ரூபாய் 9.50 மட்டும் குறைப்பதா? என்றும் செஸ் வரியை குறைக்காமல் மாநிலங்களுக்குப் பங்கு கொடுக்க வேண்டிய கலால் வரியை மட்டும் குறைத்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹர்திப் சிங் பூரி
 

ஹர்திப் சிங் பூரி

பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி, “மத்திய கலால் வரி இரண்டாவது முறையாகக் குறைக்கப்பட்டதை அடுத்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஆந்திரா, ஜார்கண்ட் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை பாஜக ஆட்சியிலிருந்ததை விட 10-15 ரூபாய் அதிகமாக உள்ளது என்ற உண்மையை எடுத்துரைக்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைத்ததை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலமும் பெட்ரோல் மீதான வாட் வரியை 2.08 ரூபாயும், டீசல் மீதான வாட் வரியை 1.44 ரூபாய் வரையிலும் குறைத்து அறிவித்தது.

மத்திய அரசின் விலையை குறைப்பு அறிவிப்பு குறித்து விமர்சித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாகே, இரண்டு மாதங்களுக்கு முன்பு ப்ட்ரோல் விலையை 18.42 ரூபாயும், டீசல் விலையை 18.24 ரூபாயும் உயர்த்தி விட்டு இப்போது 8 ரூபாயும், 6 ரூபாயும் குறைப்பதில் என்ன நன்மை இருக்கிறது என கேட்டுள்ளார். மகாராஷ்டிராவின் மாநில பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மோடிக்கு நன்றி சொல்லி விலை குறைப்பை வரவேற்றுள்ளார்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பெட்ரோல் மீதான வாட் வரியை 2.48 ரூபாய் வரையிலும், டீசல் மீதான வாட் வரியை 1.16 ரூபாய் வரையிலும் குறைத்து அறிவித்தது. இதனால் அங்கு பெட்ரோல் விலை 10.48 ரூபாயும், 7.16 ரூபாயும் விலை குறைந்துள்ளது.

கேரளா

கேரளா

கேரளாவில் அம்மாநில அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை 2.41 ரூபாய் வரையிலும், டீசல் விலையை 1.36 ரூபாயும் குறைத்து அறிவித்தது. எனவே அங்கு பெட்ரோல் விலை 107.71 ரூபாய் வரையிலும் டீசல் விலை 96.52 ரூபாய் வரையிலும் குறைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய கலால் வரியை நவம்பர் மாதம் குறைத்த போது, தமிழ்நாட்டுக்கு 1000 கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டது. இப்போது கூடுதலாக குறைத்துள்ளதால் மேலும் வருவாய் இழப்பு மாநிலங்களுக்கு எற்படும். விலையை உயர்த்தும் போது மாநில அரசுகளிடம் சொல்லிவிட்டா உயர்த்தியது. இப்போது மட்டும் எங்களைக் குறைக்கச் சொல்வது ஏன்?

பாஜக தலைமையிலான அரசு 2014-ம் ஆண்டு ஆசிக்கு வந்த பிறகு பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி 250+ சதவீதம் அதிகரித்து 23 ரூபாய் லிட்டருக்கும், டீசல் விலை 900+ சதவீதம் அதிகரித்து 29 ரூபாய் லிட்டருக்கும் விலை அதிகரித்துள்ளது. அவர்கள் உயர்த்தியதி இப்போது 50 சதவீதத்திற்கும் குறைவாக தான் குறைத்துள்ளார்கள். எனவே பெட்ரோல் விலை சென்னையில் லட்டர் ஒன்றுக்கு 102.63 ரூபாய் எனவும், டீசல் விலை 94.24 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது.

பிற மாநிலங்கள்

பிற மாநிலங்கள்

மேலும் மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களும் விலையை குறைத்துள்ளன. மேற்கு வங்க அரசு பொருளாதார சரிவு சரியான பிறகு வரியை குறைக்கும் என தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

VAT On Petrol, Diesel Goes Down In Maharashtra, Kerala, 6 Other States

VAT On Petrol, Diesel Goes Down In Maharashtra, Kerala, 6 Other States | மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் பெட்ரோல் மீதான வாடி குறைப்பு.. தமிழ்நாடு ஏன் குறைக்கல?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.