மட்டக்களப்பு மாநகர சபையினால் சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை பெறும் திட்டம்

மட்டக்களப்பு மாநகர சபையினால் சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை  (Solar panel) பெறும் திட்டம் உலகவங்கி அனுசரணையுடன் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.

மட்டக்களப்பு மாநகர சபை சந்தைக் கட்டிடத் தொகுதியின் மேல் கூரையில் இந்த சூரிய மின் பிறப்பாக்கி தகடுகள் (Solar panel) பொருத்துவதற்கான கள ஆய்வு இன்று இடம்பெற்றது.

சுமார் 08 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் இந்த சூரிய மின் திட்டத்தின் மூலம் 40 கிலோ வாட்ஸ் அளவிலான மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தற்சமயம் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை கணிசமாக குறைக்கும் பொருட்டு இந்த மாற்று திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செல்கின்றோம் என்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.