மருமகனை கொன்ற மாமனார் காவல்துறையில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியை சேர்ந்தவர் சூரஜ் பால். இவரது மருமகன் அதே கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிறார். சுனிலின் தந்தை தன்னுடைய மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு உடல்நிலை மோசமானதை அடுத்து அவரை சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். தந்தை காண சுனில் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அவரது மாமனார் பிடிக்கவில்லை என கூறப்படுவது.
இதனால் சூரஜ் சுனிலை மருத்துவமனை செல்ல விடாமல் தடுத்து உள்ளார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே சூரஜ் சுனிலை கோடாரியால் தாக்கி கொலை செய்தார். மேலும் அந்த கோடாரியுடன் காவல் நிலையத்தில் மருமகனை கொலை செய்ததாக சரணடைந்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.