யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று ஒரு கிலோ நாட்டரிசியை ஒரு ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.இதன் காரணமாக மக்கள் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மக்களை மீட்பதும், குறைந்த செலவில் பொருட்கள் கொள்வனவு மூலம் அவர்களின் மனதை திருப்திப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் சுமித்ரயோ சங்கத்தினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைவாக யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு கிலோ நாட்டு அரிசி ஒரு ரூபாய்க்கு கொள்வனவு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.