விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்த நாளில் இருந்து ரஷ்யாவை பழிவாங்கும் முயற்சியாக வல்லரசு நாடுகள் அடுத்தடுத்து ரஷ்யா மீது கடுமையான தடையை விதித்து வருகிறது.
இதனால் ரஷ்யாவின் வர்த்தக வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் ஒவ்வொரு நாளும் பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ரஷ்யா இழந்து வந்தது. இந்த நிலையில் தான் சீனா ரஷ்யாவின் வர்த்தகப் பாதிப்பைக் குறைத்தது மட்டும் அல்லாமல் தற்போது ரஷ்யாவின் முக்கிய வர்த்தகக் கூட்டணியாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக இந்த ஒரு வர்த்தகப் பிரிவில் ரஷ்யா-வை காப்பாற்றியது சீனா தான்.
புடின் அறிவிப்புக்கு வளைந்த நாடுகள்.. ரஷ்ய ரூபிள் மதிப்பு 7 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்வு!
ரஷ்ய அரசு
ரஷ்ய அரசுக்கு அதிகப்படியான வருமானத்தை அளிப்பது கச்சா எண்ணெய் ஆக இருக்கும் நிலையில் வல்லரசு நாடுகளின் தடையால் ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற முக்கியமான நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் வாய்ப்பை அடைந்தது. இந்தப் பாதிப்பைக் குறைக்கும் வகையில் சீனா ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான வர்த்தகத்தைச் செய்யத் துவங்கியுள்ளது.
சீனா
கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் வர்த்தகர்கள் மத்தியில் திரட்டிய தரவுகள் படி ரஷ்யாவிடம் இருந்து சீனா எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான கச்சா எண்ணெய்-ஐ வாங்கி வருகிறது. இதனால் ரஷ்யா – சீனா மத்தியிலான வர்த்தக உறவு பெரிய அளவில் மேம்பட்டு உள்ளது.
லாபம்
ரஷ்யா தனது வருவாய் சரிவை பாதிப்பைக் குறைக்கத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யத் துவங்கிய பின்பு சீனா கூடுதலான கச்சா எண்ணெய்-ஐ வாங்க துவங்கியுள்ளது. இதன் மூலம் சீனா தனது உற்பத்தித் துறையை அதிகப்படியான லாபத்தில் இயக்க முடியும்.
சீன இறக்குமதியாளர்கள்
தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி சீனாவின் Sinopec crop-இன் வர்த்தக நிறுவனமான UNIPEC, சீனாவின் பாதுகாப்பு அமைப்பான Norinco-வின் வர்த்தக நிறுவனமான Zhenhua oil, ஹாங்காங்-ஐ சேர்ந்த Livna ஷிப்பிங் நிறுவனங்கள் ரஷ்யா எண்ணெய்-ஐ ஆதிகம் வாங்கிய நிறுவனங்களாக உள்ளது.
2 மில்லியன் பேரல்
அரசாங்க ஒப்பந்தங்களின் கீழ் சீனா சுமார் 800,000 bpd குழாய் வழியாக ரஷ்ய எண்ணெய் பெறுகிறது. இதன் மூலம் மே மாத இறக்குமதி அளவு கிட்டத்தட்ட 2 மில்லியன் பேரலாக உயரும். இது சீனாவின் ஒட்டுமொத்த தேவையில் 15% ஆகும். சீனாவின் உடனான வர்த்தகம் மூலம் ரஷ்யா-வுக்குப் பொருளாதாரப் பாதிப்பைக் குறைக்கிறது.
ரஷ்யா – சீனா
தற்போது கிடைத்துள்ள தரவுகள் படி முதல் காலாண்டில் மட்டும் ரஷ்யா – சீனா இடையிலான கச்சா எண்ணெய் வர்த்தக அளவு 47 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. மேலும் சீனாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்த நிலையில் கச்சா எண்ணெய் தேவை சீனாவில் தற்போது அதிகரித்துள்ளது.
China increases discounted Russian oil purchases by nearly 50% after ukraine attacks
China increases discounted Russian oil purchases by nearly 50% after ukraine attacks ரஷ்யாவுக்கு நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் சீனா..!