கீவ்,-போர்க்குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷ்ய ராணுவ வீரருக்கு உக்ரைனில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்து கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தப் போரில், ரஷ்ய ராணுவ வீரர் வாடிம் ஷிஷிமரின், 21, உக்ரைனை சேர்ந்த 62 வயது மூதாட்டியை சுட்டுக் கொன்றார். இதேபோல், உக்ரைன் நாட்டு பொதுமக்களில் ஒருவரையும் தலையில் சுட்டுக் கொலை செய்தார். இதையடுத்து, அவர் போர்க்குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நீதிபதிகள் குழு முன், ஷிஷிமரின் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மன அழுத்தத்தில் இருந்ததால் போர் விதிமுறைகளை மீறி இரண்டு பேரை கொலை செய்து விட்டதை ஒப்புக் கொண்ட ஷிஷிமரின், எந்த தண்டனை விதித்தாலும் ஏற்றுக் கொள்வதாக கூறினார். போர்க் குற்றங்களுக்கான முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட வாடிம் ஷிஷிமரினுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
கீவ்,-போர்க்குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷ்ய ராணுவ வீரருக்கு உக்ரைனில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்து கடும் தாக்குதல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.