வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அதிகாரியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை அதிபர் கிங் ஜாங் உன் சுமந்து செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.
உயிரிழந்த ராணுவ அதிகாரி Hyon Chol Hae ன் இறுதி சடங்குகள் நேற்று நடைபெற்றது. அப்போது அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை சுமந்து சென்ற அதிபர் கிங் ஜாங் உன், பின்னர் தனது கைகளால் மணலை அள்ளி சவக்குழிக்குள் கொட்டினார்.
2011-ம் ஆண்டு தனது தந்தை உயிரிழந்ததற்கு பிறகு கிங் ஜாங் உன் ஒருவரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.