227 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அப்போது பேசிய அவர், இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் என்றார்.
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் கூறினார்.
தமிழக கிராமங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார்.
பின்னர், பயனாளிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்திட பணி ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.