![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653344397_NTLRG_20220523164718733196.jpg)
விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ள படம் விக்ரம். ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் 173 நிமிடங்கள். அதாவது 2 மணி நேரம் 53 நிமிடங்கள் என்று ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு இந்தப்படத்தின் பிரிமியர் ஷோ அமெரிக்காவில் ஜூன் 2 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரையிட இருப்பதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.