ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை தாக்க முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.
அலரி மாளிகைக்கு எதிரிலும் காலிமுகத் திடலிலும் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சனத் நிஷாந்த, சிறைச்சாலை அதிகாரிகளால் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
அரசியல்வாதிகளின் வீடுகள், சொத்துக்கள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சனத் நிஷாந்த, ஆசனத்தில் இருந்து எழுந்து விஜித ஹேரத் மீது தாக்குதல் சென்றார். அவரை நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் தடுத்து நிறுத்தி, ஆசனத்தில் அமர செய்துள்ளனர்.
சனத் நிஷாந்த, விஜித ஹேரத்தை கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.