வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டோக்கியா: ஜப்பானில் நடக்கும் குவாட் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்கா, ஜப்பான் அதிபர்களுடன் முக்கிய பேச்சு நடத்தினார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கும் குவாட் அமைப்பின் இரண்டாவது உச்சி மாநாடு டோக்கியோவில் நாளை (மே.24) நடக்கிறது. முன்னதாக இன்று இந்தோ – பசிபிக் பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்திய பசிபிக் நாடுகள் அளவில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட நாம் அனைவரும் பாடுபட வேண்டும். இதற்கு இந்தியா துணை நிற்கும்.
எதிலும் வெளிப்படையாகவும், நம்பிக்கை, உரிய நேரத்தில் எதையும் செய்து முடிக்கும் பாங்கு இந்தியாவிடம் உள்ளது. மேலும் பொருளாதார சவால்களை சமாளிக்க ஒரு பொதுவான திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஸிதா உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார்.
Advertisement