3 மடங்கு அதிக நஷ்டத்தில் சோமேட்டோ.. பங்கு முதலீட்டாளர்களுக்குத் திக் திக்..!

இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ நிறுவனம் ஐபிஓ வெளியிட்ட நாள் முதல் முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான ஏமாற்றம் அளித்து வரும் நிலையில் இந்தக் காலாண்டில் முடிவுகளை அதிகப்படியான நம்பிக்கை வைத்த எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சோமேட்டோ நிறுவனப் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் சோமேட்டோ பங்குகள் 1.81 சதவீதம் சரிந்து 57.00 ரூபாயாக உள்ளது.

உலகின் 40% மக்களின் சொத்து உலகின் 10 பணக்காரர்களிடம் உள்ளது.. ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தகவல்

சோமேட்டோ

சோமேட்டோ

மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் சோமேட்டோ நிறுவனம் கடந்த வருடத்தை விடவும் சுமார் 3 மடங்கு அதிக நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டில் 134.2 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்திருந்த நிலையில் மார்ச் 2021 உடன் முடிந்த காலாண்டில் 359.7 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.

வருவாய்

வருவாய்

மேலும் இக்காலாண்டில் சோமேட்டோ சுமார் 1,211.8 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் மார்ச் காலாண்டு 692.4 கோடி ரூபாய் வருமானத்தைக் காட்டிலும் 75 சதவீதம் அதிகமாகும். உணவு டெலிவரி வர்த்தகத்தில் மார்ஜின் குறைத்த காரணத்தால் EBITDA நஷ்டம் அதிகரித்துள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது.

300 நகரங்கள்
 

300 நகரங்கள்

மார்ச் காலாண்டில் மட்டும் சோமேட்டோ நிறுவனம் தனது உணவு டெலிவரி வர்த்தகத்தைப் புதிதாக 300 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளது. இதன் மூலம் மொத்தம் வர்த்தகம் செய்யும் நகரங்களின் எண்ணிக்கை 1000த்திற்கும் அதிகமாகியுள்ளது. இந்த 300 புதிய நகரங்கள் இந்தியா முழுவதும் அமைந்துள்ளது.

2022 நிதியாண்டு

2022 நிதியாண்டு

மேலும் 2022 ஆம் நிதியாண்டுக்கு மொத்தமாகச் சோமேட்டோ நிறுவனத்தின் மொத்த நஷ்டத்தின் அளவு 1,222.5 கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த நிதியாண்டில் இதன் அளவு 816.4 கோடி ரூபாயாக இருந்தது. இதேபோல் வருவாய் 1993.8 கோடி ரூபாயில் இருந்து 4192.4 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் சராசரி ஆர்டரின் மதிப்பு 397 ரூபாயில் இருந்து 398 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறை

ஊழியர்கள் பற்றாக்குறை

இந்தியா முழுவதும் இயங்கி வரும் ஆன்லைன் சேவை நிறுவனத்தில் போதுமான டெலிவரி ஊழியர்கள் இல்லாத காரணத்தால் தற்போது அதிகரித்துள்ள வர்த்தகத்தைச் சமாளிக்க முடியாமல் ஆன்லைன் சேவை நிறுவனங்கள் தடுமாறி வருகிறது.

வர்த்தகப் பாதிப்பு

வர்த்தகப் பாதிப்பு

இதனால் நிறுவனங்கள் மத்தியில் போட்டி அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தை இழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. இதைக் காலாண்டு முடிவுகளில் சோமேட்டோவும் ஒப்புக்கொண்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: zomato சோமேட்டோ

English summary

Zomato Q4: Net loss increased 3 times to Rs 360 crore; revenue increased 75 percent

Zomato Q4: Net loss increased 3 times to Rs 360 crore; revenue increased 75 percent 3 மடங்கு அதிக நஷ்டத்தில் சோமேட்டோ.. பங்கு முதலீட்டாளர்களுக்குத் திக் திக்..!

Story first published: Monday, May 23, 2022, 20:19 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.