30 மணி நேரத்திற்கு ஒரு கோடீஸ்வரரை உருவாக்கிய கொரோனா.. ஏழைகளின் நிலை?

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் கொரோனா எனும் பேரலை மக்களை ஆட்டிப் படைத்து வருகின்றது. தற்போது இந்தியாவில் அவ்வளவாக தாக்கம் இல்லை என்றாலும், அவ்வப்போது இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகி அச்சத்தினை ஏற்படுத்தி வருகின்றன.

கொரோனா காலகட்டத்தில் ஏழைகள் இன்னும் ஏழையாகினர். பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகியுள்ளனர் எனலாம்.

டிவிட்டரை விட்டு தெறித்து ஓடிய 3 அதிகாரிகள்.. ஆட்டம் காணும் அஸ்திவாரம்..!

இது குறித்து ஆக்ஸ்பாம் ஒரு அறிக்கையில், இது பணக்காரர்களுக்கு வரி விதிக்க வேண்டிய நேரம். இது வலியிலிருந்து கிடைத்த லாபம் என்றும் ஆக்ஸ்பார்ம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கூடுதலாக அதனுடன் ஒரு வீடியோவினையும் பகிர்ந்துள்ளது.

3 மடங்கு அதிகரிப்பு

3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா பெருந்தொற்று காலகட்டதில் 24 மாதங்களில் பில்லியனர்களின் சொத்துகள் 23 ஆண்டுகளில் இருந்ததை விட அதிகமாக உயர்ந்துள்ளது என அறிக்கை தெரிவித்துள்ளது. உலக பில்லியனர்களின் சொத்து மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.9 சதவீதத்திற்கு சமமாக உள்ளது. இது 2000ம் ஆண்டில் இருந்து பார்க்கும்போது (4.4 சதவீதத்தில் இருந்து) 3 மடங்கு அதிகரித்துள்ளது.

ஏழை இன்னும் ஏழ்மை நிலை

ஏழை இன்னும் ஏழ்மை நிலை

ஆக்ஸ்பார்ம் அறிக்கையின் படி கொரோனா தொற்று நோய் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீரஸ்வரரை உருவாக்கியுள்ளது. செலவந்தர்களின் செல்வம் அதிகரித்தது நலல் விஷயமாக பார்க்கப்பட்டாலும், வறுமையில் இருந்தவர்களின் நிலைமை இன்னும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வறுமை நிலை
 

வறுமை நிலை

தொழிலாளர்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து வருகின்றனர். ஆனால் இன்னும் குறைந்த சம்பளம் என்ற மோசமான சூழ்நிலையிலேயே உள்ளனர். பெரும் பணக்காரர்கள் கடினமாக உழைக்கவில்லை. ஏழைக்களுக்கு உதவுவதற்காக பணக்காரர்களுக்கு வரி விதிக்க வேண்டிய நேரமிது. ஒவ்வொரு 33 மணி நேரத்திற்கும் ஒரு மில்லியன் என்ற விகிதத்தில் இந்த ஆண்டு 263 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் விழுவார்கள் என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

30 மணி நேரத்திற்கு ஒரு மில்லியனர்

30 மணி நேரத்திற்கு ஒரு மில்லியனர்

கொரோனா பொருளாதார மந்தம் அரசியல் பதற்றம், சீனாவில் கடுமையான கட்டுபாடுகள் என பல காரணிகளுக்கு மத்தியில், தற்போது விலைவாசி என்பது மிக மோசமான பிரச்சனையாக உள்ளது. இதற்கிடையில் கொரொனா பெருந்தொற்று காலக்கட்டத்திலேயேம், ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒருவர் என 573 பேர் மில்லியனர்கள் ஆகியுள்ளனர்.

ஏழை Vs பணக்காரர்கள்

ஏழை Vs பணக்காரர்கள்

ஆக்ஸ்பார்ம் அறிக்கையில் படி இன்று 2669 பில்லியனர்கள், இது 2020ல் 573 பேராக இருந்தது. மனிதகுலத்தில் உள்ள 40 சதவீதமான 3.1 பில்லியன் மக்களின் சொத்துகளை விட, உலகின் 10 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பதாகவும் ஆக்ஸ்பார்ம் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பணம் பதுக்கல்

பணம் பதுக்கல்

தனியார்மயமாக்கல் மற்றும் ஏகபோகங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பது என உலக செல்வந்தர்களின் செல்வத்தின் அளவு வியக்கதக்கும் அளவு அதிகரித்துள்ளது. தங்கள் பணத்தை வரி கட்ட வேண்டாத இடங்களில் மில்லியனர்கள் பதுக்கி வைத்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Corona pandemic created 1 new billionaire every 30 hours: oxfam’s report

Corona pandemic has created a new millionaire every 30 hours, according to an Oxfam report. While the increase in the wealth of the rich is a good thing, the worsening situation of those in poverty is a matter of concern.

Story first published: Monday, May 23, 2022, 18:09 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.