ஜெனீவா: 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் Monkeypox (குரங்கு காய்ச்சல்) பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தந்து அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 13-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மொத்தம் 92 பேர் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. 28 பேர் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மட்டும் தலா 21 முதல் 30 பேர் வரை காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து நாடுகளிலும் 1 முதல் 5 பேர் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு இருக்கும் காயம்/சிரங்கு குணமடையும் வரையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு.